கரங்கள் விரித்து காத்திட,
கண்ணீர் துடைத்து சிரித்திட,
கவலைகளை மறக்கச் செய்திட,
காதலுடன் அணைத்திட்டாய் என்னை!
என் வாழ்வில் நீராய்
நிறைந்த மழை,
என் நெஞ்சில் என்றும்
நிலைக்கும் நிழல்,
என் வழிகாட்டி,
என் நம்பிக்கை,
என் அன்பின் தந்தையே உனக்கு,
இனிய தந்தையர்
தின வாழ்த்து.
உன் அணைப்பில் வளர்ந்தேன்,
உன் ஆசிகளில் செழித்தேன்,
உன் தோள்களில் சாய்ந்தேன்,
உன் அன்ன்பிலே திளைத்தேன்.
இத்தினம் உமக்கு
மகிழ்ச்சியையும்,
நீண்ட ஆயுளையும்
புது வாழ்வையும்
தரட்டும்!