பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும்,

கத்தரிக்காய் கிலோ 150 ரூபாவாகவும், கோவா கிலோ 150 ரூபாவாகவும், லீக்ஸ் கிலோ 250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, பேலியகொட மெனிங் சந்தையில் பழங்களின் மொத்த விற்பனை விலையிலும் ஓரளவு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.

புளி வாழைப்பழம் கிலோ 150 ரூபாவாகவும், சீனி வாழைப்பழம் கிலோ 130 ரூபாவாகவும், கோலிக்கூட்டு கிலோ 400 ரூபாவாகவும்,

முலாம்பழம் கிலோ 200 ரூபாவாகவும், அன்னாசிப்பழம் கிலோ 450 ரூபாவாகவும், பதிவாகியுள்ளது.

By JF

Leave a Reply