Facebook நிறுவனம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக Google Photos செயலிக்கு மாற்றும் வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் Facebook வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. பயனர்கள் Facebook இருந்து வேறு வலையமைப்புக்கு போட்டோக்களை அனுப்ப முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சேவையை உருவாக்கியுள்ளது. பயனர்கள் தங்களது பேஸ்புக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக Google photo க்கு மாற்றிக் கொள்ள முடியும்.
கடந்த ஏப்ரல் மாதம் America மற்றும் Canada நாடுகளில் இந்த அப்டேட் முதல்முறையாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது சகல நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.
Facebook இருந்து Google போட்டோக்கு மாற்றும் முறையை பார்ப்போம்
உங்கள் Facebook பக்கத்தின் மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் (settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்னர் அதில் ’Your Facebook Information’ என்ற ஆப்ஷனில் உள்ள ‘Transfer a copy of your photos or videos’ என்பதை க்ளிக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் இருந்து Google போட்டோவுக்கு நேரடியாக ஷேர் செய்ய முடியும்.