யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில் மாடுகளை விரட்டிச்சென்ற போது,

இருளில் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த,

மின்சார வேலியில் சிக்குண்டே ஆறுமுகன் யோகநாதன்(50), வினாயகமூர்த்தி(21) சுதர்ஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் திரு அல்பேர்ட் தலைமையில் சென்ற எம்.ஏ.எம்.அக்ரம் (92658) குழுவினர் மற்றும்,

கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேசங்களுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி சபாபதி ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனைக்காக உடல்கள் அகீல் அவசர உதவிப்பிரிவின் வாகனத்தினூடாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்சாரத்தைப்பெற்று பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டே இருவரும் உயிரிழந்துள்ளதுடன், சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றமை,

அதன் மூலம் இரு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

By JF

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”