எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளமையினால் நுகர்வோருக்கு முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் எனவும் கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply