திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக இன்று (16) குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் A. R. சமீம் அவர்களின் தலைமையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“Clean Sri Lanka – அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்” எனும் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தில் இன்று குச்சவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட நிலாவெளி, இறக்ககண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு மற்றும் புல்மோட்டை கிராமத்தின் கடற்கரை துப்பரவு செய்யப்பட்டது.
மேலும் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்ட கழிவுகள் மீண்டும் ஜாயாநகர் பிரதேசத்தில் கொட்டப்படுவதற்கு கொண்டுசெல்லப்பட்ட போது குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து, குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்களுடன் முறையாக பேசியதில்,
எதிர்வரும் புதன்கிழமை (19) இப்பிரச்சினை சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து இதற்கான தீர்வை கலந்தலோசிப்பதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் சுமுகமான முறையில் கலைந்து சென்றனர்.
இது சம்பநமான நடவடிக்கைகளை KVC ஊடகம் தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டிருப்பதுடன் எதிர்வரும் ஒரு சில நாட்களுக்குள் முழுமையான தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
