பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள உறவுகளுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ் தௌபீக் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,
உலகவாழ் தமிழ், சிங்கள மக்களால் புத்தாண்டு இம்முறை கொண்டாடப்படுகின்றது. இன, மத பேதங்களைக் கடந்து நாட்டில் நல்லிணக்கம், சுபீட்சம் நிறைந்ததாகவும் பொருளாதார ரீதியாக நாடு சுபீட்சத்தை நோக்கி நகரும் ஆண்டாக இது அமைய வேண்டும். அனைவரும் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை ஒழித்து, ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வுகள் ஏற்பட புத்தாண்டில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறேன்.
மேலும், இப் புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் வளம் ஆகியவை கிடைக்க வேண்டும் என்றும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமையவேண்டும் எனவும் பிராத்திக்கிறேன் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.