இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
90 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, சமய வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.
அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.