Category: News

All news will be updated here

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…

இன்றைய வானிலை அறிவிப்பு..!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆரம்பக் கல்வி பிரிவுக்கான அலகு திறந்து வைப்பு

இன்று 2024.07.01 கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான அலகு வலயக்கல்விப்பணிப்பாளர் Mrs.ZMM.நளீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் முஹம்மட் பயாஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!!

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024…

விலை குறைப்பு

மாதாந்தம் எரிபொருள்களின் விலை சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் இன்று (31) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் & உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை…

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2024.05.28 ஆந்திகதி இடம்பெற உள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விச்செயலாளார் H.E.M.W.G.திஸாநாயக்க தெரிவித்துள்ளர். .

ஒரே தடவையில் 4 குழந்தைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக ஒரே கருவில் தாயொருவர் நான்கு சிசுக்களை ஆரோக்கியமாக பிரசவித்துள்ள சம்வம் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

LPL – 2024 அணியொன்றின் உரிமையாளர் கைது!

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர் கட்டுநாயக்க விமான…

இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரும்  – செஹான் சேமசிங்க!

அஸ்வெசும நலன்புரி நன்மையை பெறுகின்ற போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

மைத்திரிபாலவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக CID தெரிவித்துள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப்…

யாழில் அம்மாவைக் கொன்ற தொலைபேசி கேமுக்கு அடிமையான 16 வயதுச் சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

ஜனாதிபதித் தேர்தல் திகதி  அறிவிப்பு!  2024ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஒரு நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (R.S)▪️

https://chat.whatsapp.com/JB66Ep4GbIc916CRteKkXZ

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு!

இன்று 07.05.2024 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான்…

பாராளுமன்றம் மே 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்..!

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல்…

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு மாணவன் படுகொலை..!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில்  என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கறுப்பு மே தினம் என தொழிலாளர்கள் விசனம்!

இலங்கை, அந்நிய செலாவணியை ஈட்டும் முக்கியத் துறையாக விளங்கும் பெருந்தோட்டத்துறையின் வேதன அதிகரிப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது. காலநிலை மற்றும் தற்போதைய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.