Category: All

All the post

27 வருடங்களின் பின்னர் மீண்டும் லங்கா அசோக் லேலண்ட் தொழிற்சாலை

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை பார்வையிட்டார்.…

கொரோனால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் இன்றைய (23) தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

பசறை தனியார் பயணிகள் பஸ் விபத்து:குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவு,சாரதி மதுபானம் அருந்தியிருந்தாரா?

பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற தனியார் பயணிகள் பஸ் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தற்சமயம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். விபத்து இடம்பெற்ற வீதியில்…

விபத்துக்கள் அதிகரிப்பு: புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும்…

இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச்…

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.…

ஊவா மாகாணத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்

ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கவனயீனமாக…

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்

திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02)…

அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது…

இராணுவ உறுப்பினர்களின் நலனுக்காக தனது சொத்தை பரிசளித்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த…

பிரதமர் தலைமையில் ஏற்றுமதி வலய கிராம வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை – இந்தியா விமான சேவை : பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கும் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில்…

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

புதிய 20 ரூபா நாணயம் வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்கள்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.…

மே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,…

மியான்மர் ராணுவத்தின் உத்தியோக பூர்வ பக்கத்தை நீக்கியது Facebook!

ஃபேஸ்புக் நிறுவனம் மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தை நீக்கியுள்ளது. சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஃபேஸ்புக் நிறுவனம்…

கல்விக்கான இணையம் – අධ්‍යාපනය සඳහා අන්තර්ජාලය – Internet For Education

“இன்டர் நெட் சொஷைட்டி” என அழைக்கப்படும் இணைய சமூகம் எனும் அமைப்பானது, உலகத்திலுள்ள அனைவரும் மிக நம்பகரமான மற்றும் விளைதிறனான இணைய சேவையை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக்…

Kuchchaveli

குச்சவெளி பிரதேசம்

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு…

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.