பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாணிற்கான 450 கிராம் என்ற நிகர எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடை 225 கிராமாக இருத்தல் அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போது பல இடங்களில் விற்பனை செய்யப்படும் பாண் நிகர எடையை விட குறைந்தளவிலான எடையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.