Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Jeff Bezos ஜெஃப் பெஸோஸ் அமெரிக்க நாட்டில் வேலையற்றவர்களுக்கு உணவளிக்க சுமார் 100 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் .
அமெரிக்கா முழுவதும் சுமார் 200 உணவு வங்கிகளை நிர்வகிக்கும் Feeding America எனும் அமைப்புக்கு அந்த நன்கொடையை அவர் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகாமானவர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் இப்படியான உதவி மிகப்பெரிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்த உதவித் தொகையில் சுமார் மில்லியன்கணக்கானோருக்கு உணவளிக்க முடியும் எனவும் Feeding America நிறுவனத்திட்கு இதுவரை கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய தொகை இதுவாகும் என்றும் அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.