AHRC நிறுவனத்தினால் குச்சவெளி தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்களின் இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அங்கு மீன்பிடியில் ஈடுபடும் 12 மீனவ குடும்பங்களுக்கு (ஆண், பெண்) 27 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் 05.09.2023 அன்று வழங்கி வைக்கப்பட்டன. இதன் பயனாக அவர்கள் நாளாந்த வருமானத்தை ஈட்டி வருகின்றார்கள்.

அத்துடன் நீர் நிலைகளைத் தாண்டி விவசாயத்தில் ஈடுபடுகின்றவர்களும் தங்களுடைய நெல் மூடைகளை படகின் மூலம் இலகுவாக கொண்டு வரக்கூடியதாகவும் உள்ளது. இதன்மூலம் அவர்கள் பெருமளவான பயனை அடைந்து வருவதை இன்று (14.02.2024) எமது களப் பயணத்தினூடாக அறிய முடிந்தது.
மேலும் தென்னமரவடி கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்று வெளி மாவட்டங்களில் வாழும் மக்கள் மீள தங்கள் கிராத்தில் நிரந்தரமாக வாழ முயற்சிப்பார்களாக இருந்தால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இருப்பிற்கும் தேவையான இயன்ற உதவிகளை வழங்க AHRC நிறுவனம் தயாராக இருக்கின்றது.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.