கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது. அதனைக் அவதானித்த அவ்வூர் விவசாயிகள் உரிய அதிகாரியிடமும் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்து அதனை தற்காலிகமாக இடைநிறுத்தி அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதே தொடராக இன்றைய தினம் திருகோணமலை GA அவர்களும், குச்சவெளி பிரதேச செயலாளரும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளிடமும், பெளத்த விகாராதிபதியிடமும் பேசி சுமுகமான தீர்வை பெற்று அந்த காணியை உரியவர்களிடம் கையளிப்பதற்கு மிக விரைவில் முடிவெடுப்பதாக கூறியதுடன் அந்த காணிக்கான பொதுமக்களிடம் இருக்க கூடிய ஆவணங்களையும் பார்வையிட்டு சென்றார்.