மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மாற்றுதிறனாளிகள் பங்கு பற்றியதுடன் அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையை அலங்கரித்தன.

பங்கு பற்றிய அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் பரிசுப்பொருட்கள் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுகசேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply