இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமான (ICTA) இணைந்து வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையிற்கான பிரத்தியோக இணையத்தள சேவை ஒன்றை கடந்த 26-03-2020 அன்று ஆரம்பித்து வைத்துள்ளது.
இச்சேவை இலங்கை வெளிவிவகார அமைச்சின் இணையத்தள சேவையின் கீழ் பதியப்பட்டுள்ளது, அதன் முகவரி : www.mfa.gov.lk எனினும் இதனை நேரடியாக www.contactsrilanka.mfa.gov.lk எனும் இணையதள முகவரியின் ஊடக பார்வையிட முடியும்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை கருத்திட்கொண்டு கௌரவ அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் நேரடி வழிகாட்டல் மற்றும் உத்தரவின் பேரிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பரவி இருக்கும் COVID-19 எனும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து வெளிநாட்டில் வாழும் இலங்கை பிரஜைகளுக்கு தேவையான சகல உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்கள் தமது விபரங்களை இவ்விணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனூடாக நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இணைக்கப்பட்டு மிக துரிதமாக செயட்பட நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.