அன்மையில் வெளிவந்த கொரோனா நோய்க்காவி கிருமிகள் கோழி இறைச்சியிலும் உறுவாகின்றது என்ற செய்தி சமூக வலயத்தலங்களில் பரவியமையால் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்தது.
இந்த தகவல் காரணமாக பாம் உரிமையாளர்களுக்கு சுமார் 14பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்திய நுகர்வோர் அதிகாரசபை இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் விஞ்ஞானஆய்வின் பிரகாரம் கொரோனா தொற்று கோழி இறைச்சி மூலம் பரவ வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டியது.
சமூக வலயதலங்களில் வரும் போலி தகவல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்வது அவசியம் என்பதனையும் மக்களுக்கு தமது இனையத்தில் அறியப்படுத்தியது.