கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது ஒவ்வொரு பொதுமகனின் கடமையென்று பாராளுமன்ற உறுப்பினர் H.m.m.ஹரீஷ் தெரிவித்தார்.
இன்று தனது அலுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருநந்த ஊடகவியளாலர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில். கொரோனா வைரஸ் நோய் வாய்ப்பட்டு ஒரு முஸ்லீம் இறக்கும் சந்தர்ப்பத்தில் மத முறைப்படி நல்லடக்கம் செய்வது கூட முடியாத காரணமான இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் மிக அவதானமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு வீட்டை விட்டு வெளியேற முடியாது வறுமையில் வாடும் மக்களுக்கு அரசு நிவாரண உணவுப்பொதிகளை வழங்குவது மிக அவசியமாகும் என்று கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர்,கவனம் செலுத்துவது காலத்தின் தேவை என்பதனை சுட்டிக்காட்டினார்.