இந்தியாவுடனான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சென்றனர். தர்மசாலாவில் (HPCA Stadium) நடந்த முதலாவது 1நாள் போட்டி பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பீதியால் தென்ஆப்பிரிக்க அணியினர் எஞ்சிய இரு ஆட்டங்களையும் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பினர்.
நாடு திரும்பிய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களுடன் பழகுவதையும், வெளியில் சுற்றுவதையும் தவிர்த்து, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் வீரர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அது குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளப்படும் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷூயப் மஞ்ச்ரா தெரிவித்துள்ளார்.