கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதனை கண்டறிவதற்கான PCR பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் 3 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.

1- இது ஸ்கிரீன் டெஸ்ட் அல்ல.
2- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
3-பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோர் சம்பந்தப்பட்ட அறிக்கையை பரிசோதனை செய்வதற்கு முன்பும், நோயை அடையாளம் கண்டு அது தொடர்பான அறிக்கையையும், நோயாளியின் சளியையும் அரசாங்கத்தின் தொற்றுநோய் ஆய்வு பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பரிசோதனைக்காக 6,000 ரூபா மாத்திரமே அறவிடப்படவேண்டும். 24 மணித்தியாலத்திக்குள் பரிசோதனை அறிக்கையை நோயாளிக்கு வழங்க வேண்டும். இத்துறையை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரின் பொறுப்பில் இது நடத்தப்படவேண்டும்.

நிபந்தனைகள் மீறும்போது அனுமதி ரத்து செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply