வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

மார்ச் மாதம் 1-15 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களை பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பை விடுத்திருந்தது.

மேலும் இதற்கு அமைவாக 3,000 ற்கும் மேற்பட்ட தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்கு 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிவித்தார்.

தொலைபேசி இலக்கங்கள்: 0112444480 / 0112444481 / 0115978720 / 0115978730 / 0115978734.

Leave a Reply