இலக்கம், 1090, ஸ்ரீ ஜயவர்தனபுர, ராஜகிரிய வில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொவிட் – 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜனரல் சவேந்திர சில்வா வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையத்தின் கீழ் கொண்டுவரப்படும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக சேவை அவசியத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப அனைத்து அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படுவதோடு அதற்காக அவர்கள் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.