தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்கள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெளியூர் மீனவர்களை அழைத்து வருவதனை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மீனவர்களை அழைத்து வருபவர்களுக்கு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களினால் அறிவுறுத்தப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பாக பிரதேச பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக உடனடியாக இவ்விடயத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.