கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தேவை அற்ற வகையில் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதில் விசேட ஆர்வம் செலுத்த தேவை இல்லை என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை மருந்தக தொழில்துறை சபை பொது மக்களுக்கு அறிக்கை மூலும் தெரிவித்துள்ளது.

3 மாத காலத்துக்கு போதுமான மருந்து வகைகள் கையிருப்பில் இருப்பதாக பிரதான மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்திருப்பதாக இதன் சபை அறிவித்துள்ளது.

By Admin

Leave a Reply