பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் – 19) மிக வேகமாக பரவுதன் காரணமாக இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தடை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். தென்கொரியா இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கடந்த 14 ஆம் திகதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

Flights banned

By Admin

Leave a Reply