குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள  திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடளில் குச்சவெளி பிரதேச வன பாதுகாப்பு உத்தியோகத்தர், காசிம் நகர், ஜாயா நகர் கிராம உத்தியோகத்தர், சனசமுக நிலைய உறுப்பினர்கள் நிர்வாகிகள், கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், இளைஞர் கழகங்கள், விவசாய சங்கங்கள் ஏனைய சமுக மட்ட அமைப்புக்கள் மற்றும் கேவிசி ஊடகம் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தற்போது குப்பை கொட்டப்பட்டு  வருகின்ற (ஜாயாநகர்) முள்ளிவெட்டுவான் இடத்தினை மாற்றி வேறு இடம் தேர்வு செய்வது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு, மாற்று இடமாக பின்வரும் இடங்கள் முன்மொழியப்பட்டது.

1. கும்புருப்பிட்டி பகுதியில் ஏற்கனவே குச்சவெளி பிரதேச சபையினால் கொட்டப்பட்டு வந்த பகுதி.

2. கல்லம்பத்தை வீதி கைநாட்டான், 4ம் கட்டை பகுதி.

மேலும் “இன்றைய தினம் முதல் தற்போது கொட்டப்பட்டு வரும் திண்மக்கழிவு கொட்டும் இடம் (ஜாயாநகர் முள்ளிவெட்டுவான்) பொருத்தமற்றது என சபையில் தெரிவிக்கப்பட்டதிற்கு” அமைய தற்போது பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்ட (மேலே குறிப்பிட்ட) இடங்களை பிரதி பிரதேச செயலாளருடன் கலந்தாலோசித்து அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களையும் பார்வையிட்டதில் “கைநாட்டான், 4ம் கட்டை” எனும் இடம் பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டு இறுதி முடிவாக தீர்மாணிக்கப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை குச்சவெளி பிரதேச சபை செயலாளர் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

By JF

Leave a Reply