முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாக தெரியவருகின்றது. மொழி பிரச்சினை காரணமாக குறித்த நபர்களிடமிருந்து சரியான தகவல்களை தற்போது பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரியவருகிறது. அத்துடன் இவர்கள் இலங்கைக்கு குடியேறத்தான் வந்தார்களா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

குறித்த படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தரையிறக்குவதில் சிரமங்கள் உள்ளதால் திருகோணமலைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிய வருகின்றது. அதற்கான ஏற்பாடுகள் அரச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. திருகோணமலை துறைமுகத்திற்கு நாளை (20) காலை குறித்த மியன்மார் படகு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர்களை பாடசாலை ஒன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் சுகாதரத்துறையினர் உட்பட அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.