குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், AHRC இனுடைய பிரதி இணைப்பாளர் மதன் அவர்களின் பங்களிப்புடன், AHRC இன் வேலைத்திட்ட இணைப்பாளர் இஸ்மியா அவர்களின் வழி நடத்துகையின் பிரகாரமும், பிரதேச சிவில் சமூக அமைப்பின் இணைப்பாளர் ஷைபுதீன் அவர்களின் துணையுடனும், கூட்டமானது இறைவணக்கத்துடன் இனிதே ஆரம்பமனது.

இக்கூட்டத்தில் பல சிவில் சமூக பிரதிகளும், பிரதேச சபை அதிகாரிகளும், பிரதேச ஊடகவியலாளர்களான கே.வி.சி மீடியா கலந்துகொண்டனர்.

தொடர்ந்து AHRC இன் பிரதி இணைப்பாளர் மதன் அவர்கள் உரையாற்றும் போது ஜனநாயக பங்குதாரர்களினதும், பிரதேச சபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும். வேலைத்திட்ட மாவட்ட, மாகாண, தேசிய ரீதியான விஸ்தரிப்பு தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை, காணி உரிமை போன்ற தேசிய, சர்வதேச சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டது.

தொடர்ந்து குச்சவெளி பிரதேச சபை செயலாளர் ராஜசேகர் உறையாற்றுகையில் பிரதேச சபையின் சட்ட வரைபு தொடர்பாகவும், திட்டமிடல் அபிவிருத்தி, எதிர்கால வேலைத்திட்டங்கள், பிரதேச சபையின் வருமானம், செலவு பல விடயங்கள் மிகவும் சிறப்பான முறையில் தெளிவு படுத்தினார்.

இறுதியாக சிவில் சமூக பிரதிகள் 10 பேரின் வினாக்கள் பிரதேச செயலாளரிடம் தொடுக்கப்பட்டு அதற்கான தெளிவுகள் பிரதேச செயலாளர் ராஜசேகர் அவர்களினால் துள்ளியமாக வழங்கப்பட்டது.

Leave a Reply