தி/ அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் குடிப்பதற்கோ அல்லது மலசல கூடத்தை பாவிப்பதற்கோ நீர் இல்லால் சுமார் 12 நாட்களாக இருந்துள்ளனர்.
இது போன்ற நீர் பிரச்சினை அடிக்கடி அப் பாடசாலைக்கு ஏற்படுவதுண்டு. இதை அவதானித்த அப்பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் KVC இன் ஊடகவியலாளரைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தனர்.
உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற KVC இன் ஊடகவியலாளரான A. A. றிஸ்மின் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர் அவர்களை தொடர்புகொண்டு பாடசாலையின் பிரச்சினைகள் பற்றி கூறிய போது துரிதமாக அவ்விடத்திற்கே வந்து நேரடியாக அதனைப் பார்வையிட்டு தற்காலிகத் தீர்வாக உடனடியாக அவ்விடத்திற்கு பிளாஸ்டிக் நீர் தாங்கி ஒன்றினைப் பெற்றுத் தருவதுடன் அந்த தாங்கியில் தினந்தோறும் பிரதேச சபையின் நீர் நிரப்பும் வாகனம் அவ்விடத்திற்கே வந்து நீர் நிரப்பப்படும் எனவும் கூறினார்.
குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு.வெ.இராஜசேகர் அவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்ள் மற்றும் KVC Media சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
A. A. றிஸ்மின்