இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024 காம் ஆண்டிற்கான பருவ காலத்தினை அடிப்படையாக கொண்டு நடுவர் பணியாற்ற இங்கிலந்து கிரிக்கட்டின் அங்கீகாரத்துடன் தெரிவாகியுள்ளார் முஹம்மட் பயாஸ்.
கசீர் மொஹம்மட் தௌபீக், சாஹுல் கமீட் உம்மு மாஹிரா ஆகியோரின் மூத்த புதல்வராகிய பயாஸ் அவர்கள் மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயம் மற்றும் மூதூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார், மேலும் இவர் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டம் பெற்றவரும் ஆவார்.
தற்போது இவர் திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆவர்.
இலங்கை கிரிக்கட் சபையின் நடுவரும், ACUSL இன் நடுவருமாகிய தௌபீக் முஹமட் பயாஸ் மூதூர் UDPM இன் சிரேஸ்ட நடுவரும் மற்றும் ஆரம்பகால உறுப்பினருமாவார்.
மூதூர் கிரிக்கட் வரலாற்றின் சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரரும், விக்கட் காப்பாளருமான தௌபீக் முஹம்மட் பயாஸ் அவர்கள் மூதூர் இலெவன் பவர் கடின பந்து கிரிக்கட் அணியின் தலைவராவார். மேலும் மூதூர் வெஸ்டன் வொறியஸ் மற்றும் திருமலை ஸ்பென்ஸ் அணியின் மாவட்ட கழக வீரருமாவார்.
2019 இல் தேசிய நடுவராக தனது நடுவர் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையின் மூதூர், திருமலை மற்றும் பல மாவட்டங்களில் தனது நடுவர் பணியினை சிறப்பாக மேற்கொண்டுள்ள அதேவேளை முதல் முதலாக கிரிக்கட்டின் தாயகமான இங்கிலாந்து நாட்டிலும் நடுவர் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது அவரின் நடுவர் வளர்ச்சியின் அடுத்த மைல் கல்லாகும்.
வாழ்த்துக்கள் சகோதரா.…