11 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கட் பந்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேயில் பதிவாகியுள்ளது.
கிரிக்கட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் பந்து பட்டதில் மயங்கி விழுந்த சிறுவன் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் ஷெளர்யா என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் பந்துவீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக சிறுவனை நோக்கி அடித்துள்ளார். சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் பந்து பலமாக பட்டதில் இந்த மரணம் ஏற்ப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.