1. நான் வச்சதுதான் சட்டம் அதைத்தான் கேட்கணும் அதைத்தான் கீழ் உள்ளவர்கள் செய்யவேண்டும். என்ற மனநிலை உள்ள தலைமைத்துவம் இதனை ((Autocratic leadership)) என்று சொல்வார்கள்
  2. எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதைத்தான் fallowup பண்ணுவேன் செயல்படுவேன் வேறு எதையும் செய்ய மாட்டேன் என்ற மனநிலையில் உள்ள தலைமைத்துவம் உதாரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள்இ அதிகாரிகளை இந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக குறிப்பிடலாம்.
  3. ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது ஆனால் பிடிக்கும் என்ற மனநிலையில் உள்ள தலைமைத்துவம் உதாரணமாக சினிமா ஹீரோக்களை பின்பற்றும் மனநிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடலாம்.
  4. சேர்ந்து வேலை செய்துஇ வேலை வாங்கக் கூடியவர் (participating leadership) உதாரணமாக ஏனைய உறுப்பினர்களோடு இணைந்து வேலை வாங்கக்கூடிய ஒரு தலைமைத்துவம்
  5. எதையாவது எப்படியாவது மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்கின்ற ஒரு தலைமைத்துவம். உதாரணமாக அலுவலகக் கட்டமைப்புகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள் மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது என்ற மனநிலை உள்ள தலைமைத்துவம்.
  6. ஆறாவது என்னவென்றாலும் நடக்கட்டும் நான் எதுவும் செய்ய மாட்டேன் அது நடக்கிற நேரம் பார்ப்போம்இ பிறகு செய்வோம் என்கின்ற மன நிலையில் உள்ள ஒரு தலைமைத்துவம்.
  7. தலைவராக இருக்க மாட்டார் ஆனால்இ தலைவருக்கு அல்லது பிறருக்கு பின்னாலிருந்து கருத்துக்களை கூறி வழி நடத்திக் கொண்டிருக்கும் தலைமைத்துவம்.

இவ்வாறு ஏழு வகையான தலைமைத்துவ பண்புகள் ஒவ்வொருவரிடமும் ஆட்கொண்டிருப்பது நாம் அடையாளம் காணலாம. இவற்றுள் எந்த தலைமைத்துவம் பொருத்தம் அல்லது நாம் எந்த தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டு நோக்குவதற்கு இந்த தலைமைத்துவ பண்புகள் வழிகாட்டும் என கருதுகிறேன்.

Leave a Reply