இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் ஆறு (06) கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான தற்காலிக அறையொன்றை கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை மகாவலி நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனையிட்டனர். அங்கு, குறித்த சாவடியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர், சிறிய பொதிகளாக தயாரிக்கப்பட்ட ஆறு (06) கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய சிறிய பொதிகளுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை லிங்கநகரைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply