நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலசலக்கூட குழிக்குள் இறக்குவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த கொங்கிரீட் வளைங்களில் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறித்த மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவன் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக,

கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து நிர்மாணப் பணிக்காக கொங்கிரீட் வளையங்களை எடுத்து வந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By JF

Leave a Reply