கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya) அமைப்பதற்கும் அதனுடன் இணைந்து அப்பிரதேச  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேள்கொள்ளப்பட்டுவருகிறது.

இது தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (31)
அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது இத்திட்டம் தொடர்பாக முழுமையாக ஆராய்யப்பட்டதுடன், விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்படதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் விமல்ராஜ், காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply