பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந்த 11 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மாதாந்தம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.