அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். சில மிருகங்களில் ரத்தத்தை தான் குடிப்பேன் என கூறும் அவர், மனித ரத்தம்தான் மிகவும் ருசியாக இருக்கும் என கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவர் 3,800 லிட்டர் ரத்தத்தை குடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வந்தது இல்லை என கூறியுள்ளார். காலையில் எழுந்து காஃபியுடன் கலந்து ரத்தத்தை குடிப்பாராம். தனது 18 வயதில் தொடங்கிய இந்த பழக்கம் தற்போது வரை தொடர்கிறது என கூறியுள்ளார்.