ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன்,
இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தில் காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிப்பை வழங்குவதற்கு கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.
மேலும், 16 மாதகாலம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் கீழ், மோட்டார் வாகன தொழிநுட்பம், உற்பத்தித் தொழிநுட்பம் – CNC, உருக்கு ஒட்டுத் தொழிநுட்பம், மின்னியல் தொழிநுட்பம், இலத்திரனியல் தொழிநுட்பம், தானியக்கவியல் மற்றும் றொபோ தொழிநுட்பம், திரவ அமுக்க தொழிநுட்பம், மெகாரொனிக் தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து பாடநெறிகளிலும் பொதுத் தேவைகளுக்காக வசதிகளை வழங்குவதே நோக்கமாக அமைகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களுக்கிடையே கையொப்பமிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது.
அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.