ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சுழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும்,

அதற்கிணங்க கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை விமானப் பயணிகள் அதிகமாகப் பயன்படுத்தும் இடமொன்றாக்கப்பட்டுள்ளதாகவும்,

விமான நிலையம் மற்று விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெடிய தெரிவித்தார்.

2024 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் விமான நிலைய சேவைகளைப் 850,000 விமானப் பயணிகள் பெற்றுள்ளனர்.

அவ்வாறே இவ்வாண்டு இறுதியளவில் 10 மில்லியன் விமானப் பயணிகள் விமான நிலையத்தை உபயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் அதுல கல்கெடிய நம்பிக்கை வெளியிட்டார்.

2022ஆம் ஆண்டில் கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 05மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் அவ்வெண்ணிக்கை 08 மில்லியன் வரை அதிகரிக்க முடிந்ததாகவும் மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply