வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 13.03.2024ம் திகதி புதன் கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது..

பாடசலை அதிபர் A.அதிஷ்டலிங்கம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததோடு, இந் நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான Mr.குகதாசன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததோடு,விசேட அதிதிகளாக,Mrs.T.இராஜதுறை ( உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர்_ திருகோணமலை வலயம்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

அதிதிகளாக, செல்வி.V.வினோதா ( உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்_ திருகோணமலை வலயம்) P.விமலதாசன் ( முன்னால் அதிபர் – திரியாய்),Mrs.Nalayini ( ஓய்வு நிலை ஆசிரியை – திரியாய்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்..

திருகோணமலை புனித சூசையப்பா கல்லூரியின் பேண்ட்வாத்திய முழக்கத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வானது மிகவும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை சுமந்து
அனைவரது மனங்களையும் கவர்ந்து நிறைவுக்கு வந்தது.

2024ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சம்பியனாக 718 புள்ளிகளைப் பெற்ற பாண்டியன் இல்லம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாமித்தினை 712 புள்ளிகளைப் பெற்ற சேரன் இல்லம் ( மஞ்சள்) பெற்றுக் கொண்தோடு,மூன்றாமித்தினை 682 புள்ளிகளைப் பெற்ற சோழன் இல்லம் ( பச்சை) பெற்றுக் கொண்டது.

Leave a Reply