சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று (14) இரவு தங்கும் விடுதியின் அறைக்குள் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பலுகொல்லேகம மெகொடவெவ பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகாத உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை தொடர்ந்து பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.