கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில்,

உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், புதன்கிழமை (13) மதியம் 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த,

வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களான பெண்கள் இருவரையும் கைது செய்து வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விகாரைக்குள் நுழைந்த பெண், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை பொதிசெய்து, மற்றுமொரு பெண்ணிடம் கொடுத்ததாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

By JF

Leave a Reply

You missed