நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் அடையாளங் காணப்பட்ட எயிட்ஸ் நோயாளர்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 91 ஆண்கள்,

மற்றும் 5 பெண்கள் உள்ளடங்குவதாகவும் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 59 பேர் உயிரிழந்துள்ளனர்,

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 309 பேர் எயிட்ஸ் நோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 4 ஆயிரத்து 706 ஆண்களும் ஆயிரத்து 472 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By JF

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”