2019 ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்கள் மாணவர்களது தொடர்புபட்டு செயற்படுவதால் அவர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் கொண்டுவரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

புதன்கிழமை (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு கஷ்ட, அதிகஷ்ட கொடுப்பனவுகளை வழங்கநடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் அதிபர், ஆசிரியர் போன்று அவர்களையும் தனி ஒரு பிரிவாக்க கல்விசார் ஊழியர்களுக்குள் உள்ளடக்கவேண்டும். அதேபோல் அவர்களுக்கான கடமை நேரமான ஒரு நாளைக்கு இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் எந்தவொலு அரச ஊழியர்களுக்கு இவ்வாறு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் இதனை கருத்திற்கொண்டு அக்கடமை நேரமானது ஒரு நேரமாக மாற்றிக்கொடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், அவர்கள் உடற்கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த டிப்ளோமா, உயர்டிப்ளோமா, பட்டப்படிப்புக்களை நிறைவு செய்தபின் பதவி உயர்வுகள் வழங்கவேண்டும் எனவும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கங்களை உரிய அதிகாரிகள் அழைத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மேலும் அவரது உரையில், VAT அதிகரிப்பினால் மக்கள் பல நெரிக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை முடியாத நிலை காணப்படுவதாகவும், மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவரது உரையில், அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவில் முறைகேடுகள் காணப்படுவதாக உரிய அதிகாரிகள் அதனை கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.