இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜப்பானிய யென்னுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 10.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்க்கு நிகராக 4.8 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 6.4 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 3.7 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Leave a Reply