10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பானது இன்று (20) இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) முதல் (26)ஆம் திகதி வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இலங்கையின் தலைமை சாரணரான அதிமேதகு ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (21)ஆம் திகதி ஆரம்ப விழா நடைபெறவுள்ளது.

அனைத்து விதமான ஏற்பாடுகளும் இன்று நடைபெற்ற வண்ணம் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதே வேளை கடமையாற்றுவதற்கு சுகாதாரப் பரிசோதர்கள், சுகாதார ஊழியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என அனைவரும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித தடையுமின்றி முழு தேவையும் வழங்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், துறைசார் அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

“மாற்றத்திற்கான தலைமை” என்ற தொனிப்பொருளில் சுமார் 11,500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர் மற்றும் சாரணர் தலைவர்கள் இம்முகாமில் இணைய உள்ளனர். இந்த முகாமில் சுமார் 500 வெளிநாட்டு சாரணர் தலைவர்கள் மற்றும் சாரணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், முதன்முறையாக ஒரு பெண் சாரணர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர் இயக்கம் முகாம் அமைக்கவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 12,000 இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சாரணர்களுக்கான நடைமுறை நடவடிக்கைகள், உட்பட வாணவேடிக்கை, கலாச்சார நிகழ்ச்சிகள் என்பன நாளை (21) மதியம் 2.00 மணிக்கு பிறகு ஆரம்பமாகி தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முகாம்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

பிரதம சாரணர் ஆணையாளரும் சட்டத்தரணியுமான திரு ஜனப்ரித் பெர்னாண்டோ ஜம்போரி தலைவராகவும், நிகழ்ச்சித்திட்ட ஆணையாளர் சரத் மாத்தர ஆராச்சி, தேசிய பயிற்சி ஆணையாளர் கேணல் பத்மலால் பெரேரா மற்றும் பிரதி பிரதம ஆணையாளர் எம்.எப்.எஸ்.முஹீட் ஆகியோர் முகாம் ஏற்பாட்டாளர்களாகவும் செயற்படுகின்றனர்.

இங்கு உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப, கிழக்கு மாகாண சபை, உணவு மற்றும் பானங்கள் பங்குதாரர் இலங்கை வங்கி மற்றும் ஜான் கீல்ஸ் என்பனவும் செயற்படுகின்றன.

நாளை (21) இலங்கையின் பிரதம சாரணர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply