இன்று 2024 பிப்ரவரி 16ம் திகதி அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு, மக்கள் பாவனைக்காக நிருவாகத்தினர், ஜமாத்தினர்களின் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்கப்பட்டது.
நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை எமக்கு வழங்கிய ரிஸால் ஹாஜியார் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கு ஒத்தாசை புரிந்த சகோ. S M A றவூப் மற்றும் முஜீபுர் றகுமான் ஆகியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்ததுக் கொள்கிறோம்.
முழுமையான ஒரு செயற்றிட்டமாக இதனை மாற்றியமைக்க பொருளாதார ரீதியாக உதவியவர்களுக்கும், ஜமாத்தாரிடம் இருந்து பெறப்பட்ட பள்ளிவாசல் நிதியில் இருந்தும் பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுள்ள வகையில் ஒவ்வொரு ஜமாத்தாருக்கும் இதன் நன்மைகளை இறைவன் பூரணமாக வழங்க வேண்டும்.

இறைவனின் பொறுத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இரகசியமாகவும் பரகசியமாகவும் உதவிய நல்லுள்ளங்களுக்கு இறைவனே நற்பாக்கியங்களை வழங்க போதுமானவன்.

By JF

Leave a Reply