AHAM – Humanitarian Resource Center அகம் மனிதாபிமான வள நிலையம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய சிவில் அமைப்பின் புதிய 30 பேர் கொண்ட உறுப்பினர்கள் தெரிவு இன்று குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்மூலம் குச்சவெளி பிரதேசத்துக்குரிய பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை அரசாங்கம் சார்பற்ற அல்லது சார்பான உரிய நபர்களுடன் கலந்தாலோசித்து இப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக இந்த குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டது.

விபரம் :

பொதுச் செயலாளர் –

I. தஜிப்கான் BA(Hons)
காசிம்நகர் – GN

இணைப்பாளர்

1.(முஸ்லிம்) – இஸ்மாயில் சயிபுத்தீன் BBA
புல்மோட்டை – 03 – GN

2.(தமிழ்) – இலட்சுமி காந்தன்
கும்புறுபிட்டி தெற்கு – GN

3. பிரதி இணைப்பாளர் –
M. கஜநிதி
திரியாய் – GN

4. A. நஸீதா குச்சவெளி – GN

5. இளைஞர் அமைப்பாளர் –
R. சர்மிலா
கும்புறுபிட்டி கிழக்கு – GN


உறுப்பினர்கள் :

1. Y. யுவராஸ் (Diploma In ICT)
காசிம்நகர்

2. சரீப் முகமட் ரியாட் (அத்தீத்)
ஜாயா நகர்

3. A.R. முனவ்பர் (Dip in Civil Engineer)
புடவைக்கட்டு (செந்தூர்)

4. J. நிமலகாசன்
கோபாலபுரம்

5. M. சத்தியராஜ்
கும்புறுபிட்டி – கிழக்கு

6. M. ரேனுகா
கும்புறுபிட்டி – வடக்கு

7. M. சஜிதா
திரியாய்

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.