திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய திருமணமாகாத இளைஞரும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஐச்சந்தீவு கடற்றொழிலுக்கான உப்பாறு பகுதிக்கு  மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்கள் காணாமல் போயிருந்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் சென்ற படகானது குறித்த ஆற்றில் கவிழ்ந்து இருந்ததை அவதானித்ததை தொடர்ந்து இன்றையதினம் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டது.

Leave a Reply