பாடசாலையை விட்டு இடைவிலகி மீண்டும் மீளிணைத்த மாணவர்கள், கற்றல் உபகரணங்கள் வாங்குவதில் சிரமப்படும் மாணவர்கள் மற்றும் வறுமை நிலையிலுள்ள மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 75 மாணவா்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது RECDO நிறுவனத்தின் உதவியுடன் இன்று (14) கிண்ணியா பிரதேச செயலாளா் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளா் ஐ.முஜீப், கிண்ணியா பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தா் கே.நிசவ்ஸ், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தா் தாஹிரா அஸ்வத்கான், மகளிர் அபிருத்தி உத்தியோகத்தா் சமீனா ரியாத்,சிறுவா் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தா் எம்.எஸ்.எம்.தவ்ஜீத், உளவளத்துணை உத்தியோகத்தா் மற்றும் அனா்த்த முகாமைத்துவ உத்தியோகத்தா் என பலரும் கலந்து கொண்டனர்.

By JF

Leave a Reply